கர்நாடக பீடாதிபதி ஸ்ரீமுஷ்ணம் வருகை
ADDED :2317 days ago
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோவிலுக்கு, கர்நாடக மாநில வியாசராயர் மடத்தின் பரம்பரை பீடாதிபதி, ஸ்ரீ வித்யாஸ்ரீஷ தீர்த்த சுவாமிகள் நேற்று (ஜூன்., 3ல்) வருகை தந்தார். கர்நாடக மாநில வியாசராயர் மடத்தின் பரம்பரை பீடாதிபதி, ஸ்ரீ வித்யாஸ்ரீஷ தீர்த்த சுவாமிகள் நேற்று (ஜூன்., 3ல்) ஸ்ரீமுஷ்ணம் வந்தார். 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீமுஷ்ணம் வியாசராயர் மடத்தின் கட்டுமான பணிகள் துவங்குவதற்கான, மூல கோபாலகிருஷ்ண பூஜையும், சிறப்பு பூஜையையும் நடத்தி வைத்தார்.
பின்னர், பூவராகசாமி கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். பீடாதிபதி வருகையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. சென்னை தொழிலதிபர் ஆனந்தன், பொறியாளர் கிருஷ்ணகுமார், மேலாளர் ராகவேந்திரன், சேதுமாதவன் உடனிருந்து வரவேற்றனர்.