இராமாயணத்தில் சொல்லப்பட்ட பாவங்கள்
வால்மீகி இராமாயணத்தில் பதினாறு வகையான செயல்கள் பாவங்களாகச் சொல்லப்பட்டுள்ளன. அவை:
1. கோமாதாவை (பசு) காலால் உதைப்பது.
2. சூரியனைப் பார்த்தபடி இயற்கை உபாதைகளைக் கழிப்பது.
3. அரசாட்சி நன்கு நடந்தாலும் அனாவசியமாகக் குறைகூறுவது.
4. ஒருவரது வருமானத்தில் ஆறில் ஒரு பங்கு என்று வரிவசூல் செய்த பிறகும் கூட, மக்களுக்கு நன்மைகள் செய்யாமல் இருக்கும் அரசாங்கம்.
5. யாகம், ஹோமம் ஆகிய புனித காரியங்களைச் செய்யும் அந்தணர்களுக்குரிய மரியாதையைச் செய்யாமல் இருப்பது.
6. பால் மற்றும் பாயசம் உள்ளிட்ட இனிப்பான ருசி மிகுந்த உணவுகளை இறைவனுக்கும் பித்ருக்களுக்கும் சமர்ப்பணம் செய்யாமல் உண்பது.
7. பெரியோர் வரும்போது ஆசனத்திலிருந்து எழுந்து மரியாதை செலுத்தாமல் இருப்பது.
8. ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டிய விஷயத்தை வெளியில் சொல்வது.
9. உணவுண்ணும் வேளையில் ஒருவர் வந்துவிட்டால் அவருடன் பகிர்ந்து உண்ணாமல் தான் மட்டும் உண்பது.
10. மது, மாமிசம் போன்றவற்றையும், போதைப் பொருட்களையும் விற்பனை செய்வது.
11. தனக்கான கடமைகளை அறிந்து அதைச் செய்யாமலிருப்பது
12. பெற்றோர்களை அவமதிப்பது அலட்சியம் செய்வது.
13. உதவி கேட்டு வருபவர்களிடம் தனக்கு சக்தியிருந்தும் செய்யாமல் தவிர்ப்பது.
14. பிறரைப் பற்றி அடுத்தவர்களிடம் அபாண்டமாகக் குற்றம் கூறுவது.
15. பசு, கன்று, ஈன்றதும் குட்டியை பசுவிடம் பாலருந்தச் செய்யாமல் இருப்பதுடன், ஈன்ற பத்து நாட்களுக்குள் பாலைக் கறந்து அருந்துவது.
16. கிணறு, ஏரி மற்றும் குளம் ஆகிய நீர்நிலைகளில் அசுத்தம் செய்வது.
இவையெல்லாம் கொடிய பாவங்கள் என்று அயோத்தியா காண்டத்தில் விளக்கியுள்ளார் வால்மீகி முனிவர்.