வெயிலுகந்தம்மன் கோயில் வைகாசி விழா துவக்கம்
விருதுநகர்: விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதை தொடர்ந்து ஜூன் 12ல் அக்னி சட்டி, 13ல் தேரோட்டமும் நடக்கிறது.பிரசித்திபெற்ற இக்கோயிலில் சிறப்பு பூஜைகளுடன் நேற்று இரவு 8:00 மணிக்கு கொடியேற்றப்பட்டு இரவு 10:00 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் அம்மன் நகர் வலம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர் .ஜூன் 16 வரை நடக்கும் இவ்விழாவில் தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் நகர்வலம் வருதல் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக பொங்கல் ஜூன் 11 ம் , 12 ல் கயிறுகுத்தல், அக்னிசட்டி நடக்கிறது.விரதமிருக்கும் பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி நேர்த்திகடன் செலுத்துவர். 13 ம் தேதி தேரோட்டமும், 14 ம்தேதி வெயிலுகந்தம்மன் மற்றும் ஸ்ரீபராசக்தி மாரியம்மன் எழுந்தருள தேர்சுவடுநோக்கவரும் சிறப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. வைகாசி விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து வருகின்றனர்.