திருக்கோஷ்டியூர் நம்பிகள் அவதார திருநாள்
ADDED :2316 days ago
திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் திருக்கோஷ்டியூர் நம்பியாண்டர் 1033 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இக்கோயிலில் அஷ்டாங்க விமானத்தில் அனைவருக்கும் ஓம் நமோ நாராயணா எனும் மந்திரத்தை உபதேசித்த ராமானுஜருக்கு அந்த 8 எழுத்து திருமந்திரத்தை உபதேசம் செய்தவர் நம்பியாண்டார் ஆவார். இருவருக்கும் தனி,தனி சன்னதிகள் இக்கோயிலில் உண்டு. நம்பியாண்டார் அவதார தினமான வைகாசி ரோகிணி நட்சத்திரத்தில் விழா துவங்கி பத்து நாட்கள் நடைபெற்றது. நேற்று பெருமாள் ஆண்டாள் சன்னதியில் எழுந்தருளினார். தொடர்ந்து நம்பியாண்டார் பெருமாள், தாயார்,ஆண்டாளை வழிபட்டு பின் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.