உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதுகுளத்தூர் சிவகாளி அம்மன், கோயில் பால்குட ஊர்வலம்

முதுகுளத்தூர் சிவகாளி அம்மன், கோயில் பால்குட ஊர்வலம்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் சங்கரபாண்டி ஊரணி வடகரையில் அமைந்துள்ள சிவகாளி அம்மன், ராஜாத்தியம்மன் கோயில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.

ஜூன் 3ல்மாலை கணபதி ஹோமம் பூஜையுடன்துவக்கப்பட்டு காந்திசிலை அருகில் உள்ள பிள்ளையார் கோயிலில் இருந்து பக்தர்கள் அக்கினிசட்டி,பால்குடம் எடுத்து பஸ் நிலையம்,வழிவிடு முருகன் கோயில்,செல்விஅம்மன் கோயில் தெரு வழியாக ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.

பின் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. நேற்று (ஜூன்., 4ல்) காலை 108 விளக்கு பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு பால்,இளநீர்,குங்குமம்,சந்தனர்,பன்னீர் உள்பட 21 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்புபூஜை நடந்தது.கோயில் நிர்வாகத்தின் சார்பில் பொது அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !