உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழாவில் அர்ச்சுனன் தபசு

திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழாவில் அர்ச்சுனன் தபசு

திருத்தணி : திரவுபதியம்மன் கோவிலில் நடந்து வரும் தீமிதி விழாவில், அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நேற்று (ஜூன்., 5ல்) நடந்தது.

திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் கிராமத்தில் உள்ள, திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா, கடந்த மாதம், 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், மதியம், 2:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை மகாபாரத சொற்பொழிவு நடைபெறுகிறது.

மேலும், மாலை, 6:30 மணிக்கு, உற்சவர் அம்மன் வீதியுலாவும், இரவு, 10:00 மணிக்கு, மகாபாரத நாடகமும் நடந்து வருகிறது.இந்நிலையில்,நேற்று (ஜூன்., 5ல்), அர்ச்சுனன்
தபசு நிகழ்ச்சி நடந்தது.

இதில், திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.வரும், 9ம் தேதி காலையில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில், தீமிதி விழாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !