தேவிபட்டினம் அருகே அழகன்குளம் நவநீத கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேகம்
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே அழகன்குளம் ராதா ருக்மணிசமேத ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று (ஜூன்., 6ல்) காலை 8:25 மணிக்கு நடைபெற்றது.
அழகன்குளம் யாதவர்உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ராதா ருக்மணிசமேத ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று (ஜூன்., 6ல்) காலை 8:25 மணிக்கு நடைபெற்றது.
அனுக்ஞை, விக்னேஸ்வரர் வழிபாடு நடந்தது. ஐந்து கால யாகசாலை பூஜைகளும், ஹோமங்களும் நடைபெற்றன.
நேற்று (ஜூன்., 6ல்) காலை 8:25 மணிக்கு தேவிபட்டினம் ஆதி கேசவப் பெருமாள் ஆலய அர்ச்சகர் சவுமிய நாராயண ஐயங்கார் தலைமையிலான அர்ச்சகர்கள் யாகசாலையில் பூஜை
செய்யப்பட்ட புனித நீரை மங்கல இசை முழங்க எடுத்து சென்று கோவில் கோபுரத்தில் ஊற்ற கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
பின்,மூலவர் ராதா ருக்மணிசமேத ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்
செய்தனர். பின்னர்நடைபெற்ற அன்னதானத்திலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் ஐக்கிய அரபு அமீரக யாதவர் இளைஞர் பேரவை நிர்வாகிகள், இந்து சமூக சபை நிர்வாகிகள், யாதவர் உறவின் முறை தலைவர் ரத்தினம், ராமநாதபுரம் சிவா ஜீவல்லர்ஸ் குடும்பத்தார்கள்,அழகன்குளம் முன்னாள் ஊராட்சி தலைவர் அசோகன்,கிருஷ்ணா அக்ரோ சென்டர் செந்தில்வேல், அழகன்குளம் செல்வவேலன், சரவணன், பா.ஜ.க.,கிளை தலைவர் பழனிசாமி, பஜனைமடத்தெரு பரமேஸ்வரன், ராமநாதன், வாசகன், ராஜேந்திரன், நித்தீஸ், ராமநாதபுரம் பாரம் சிஸ்டம்ஸ் நிர்வாகிகள், முத்து நாச்சி ஸ்டீல்ஸ், ஸ்ரீ பாலாஜி ஆப்செட், அழகன்குளம் மணிஸ் ஸ்டோர்ஸ், வி.கே.டி. ஹார்டுவேர்ஸ் நிர்வாகிகள் மற்றும் குடும்பத் தினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அழகன்குளம் யாதவ உறவின் முறையினர் செய்திருந்தனர்.