உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நங்கநல்லூரில் நம்மாத்துல ஸ்ரீ மஹாபெரியவா விஜயம் சத்சங்கம்

நங்கநல்லூரில் நம்மாத்துல ஸ்ரீ மஹாபெரியவா விஜயம் சத்சங்கம்

நங்கநல்லூர் ஸ்ரீ ராம மந்திரம் திருமண மண்டபத்தில் நம்மாத்துல ஸ்ரீ மஹாபெரியவா 84வது சத்சங்கம் மிகவும் விமர்சையாக நடைப்பெற்றது. நிகழ்ச்சியை திரு. பாலமுரளி கிருஷ்ணா ஏற்பாடு செய்திருந்தார். இச்சத்சங்கத்தில் ஏராளமான ஆன்மீக அன்பர்கள் மற்றும் மகா பெரியவா பக்தர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தனர். ஸ்ரீ மஹா
பெரியவாள் பிரதிமைக்கு பூரண கும்ப மரியாதை மற்றும் வெண்குடை பிடித்தபடி பிரம் மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீ மஹாபெரியவா பக்தி
பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. பிறகு மாயவரம் அருகில் கூத்தனூர் என்ற கிராமத் தனருகில் மிக வேகமாக உருவாகி வரும் ஸ்ரீ சங்கராபுரம் என்ற ஒரு நூதன வேத கிராமத்தை பற்றி வக்கீல் அண்ணா ஒரு நீண்ட விரிவுரை வழங்கினார்.

"நம்மாத்துல பெரியவா" என்ற தலையங்கத்தின் கீழ் இதுவரை பதினான்கு சத்சங்கம் கடந்த ஒரு மாத காலத்தில் நடந்து முடிந்ததுள்ளது. மேலும் அடுத்த ஒரு வருடத்திற்கு பல
நகரங்களில் வெவ்வேறு கிரஹத்திற்கு ஸ்ரீ மஹா பெரியவாள் பிரதிமையுடன் விஜயம் செய்து ஸ்ரீ சங்கராபுரம், மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு நூதன வேத கிராமம் என்ற தலைப்பில்
மேலும் பல சத்சங்கம் நடத்த வைஷ்ணவி டிரஸ்டின் மேனேஜிங் டிரஸ்டி திரு.
கி. வெங்கடசுப்பிரமணியன் (வக்கீல் அண்ணா) முடிவு செய்து வெற்றிகரமாக நடந்து வருகின்றது.

இதற்கு பக்க பலமாக தசாவதாரம் என்ற ஒரு குழு இயங்கி வருகிறது.அடுத்த சத்சங்கம் ஜூன் 9ம் தேதி சென்னை சேலையூரில் நடைபெறவுள்ளது. ஆன்மிக அன்பர்கள் அணைவரும் இதில்
பங்கு பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !