உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கமுதி அருகே வைகாசி பொங்கல் முளைப்பாரி திருவிழா

கமுதி அருகே வைகாசி பொங்கல் முளைப்பாரி திருவிழா

கமுதி:கமுதி அருகே நீராவி கரிசல்குளத்தில் காளியம்மன், முத்தாலம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா, முளைப்பாரி திருவிழா தேவர் உறவின்முறை சார்பில் மே 28 ல்
கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

ஜூன் 4ல்கரகம் எடுத்தல், இரவு முளைப்பாரி ஊர்வலம், அக்னி சட்டி எடுத்தல், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நள்ளிரவு அம்மனுக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
ஜூன் 5 ல், அம்மனுக்கு வைகாசி பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், அம்மனுக்கு தீபாராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்து, மாலை முளைப்பாரி கங்கை கரையில் கரைக்கப்பட்டது.

நாடகம், மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. மஞ்சள் நீராட்டு விழா நடத்தப்பட்டு திருவிழாநிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !