உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் அருகே சுந்தரராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

விருதுநகர் அருகே சுந்தரராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

விருதுநகர்:விருதுநகர் அருகே ஒண்டிபுலி நாயக்கனூர் ஊராட்சி ஓ.முண்டலப்புரத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீசுந்தர ராஜபெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக விழா நேற்று
(ஜூன்., 6ல்)நடந்தது. காலை 8:00 மணிக்கு கோ பூஜை, அஸ்வத் பூஜை, கலசசந்தி பூஜை, புண்யா வாஜனம், பிரதான ஹோமம் மகா பூர்ணகுதி நடைபெற்றது. அதை தொடர்ந்து மகா கும்பாபி ஷேகம் நடந்தது. அதன்பின் 1:00 மணிக்கு பால் அபிஷேக விசேஷ திருவாராதனம் நடைபெற்றது.

மாலையில் திருக்கல்யாணம் மற்றும் 108 குத்து விளக்கு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !