காங்கயம்பாளையம் ஐயப்பன் கோவில் ஆண்டு விழா
ADDED :2351 days ago
சூலூர்:காங்கயம்பாளையம் ஐயப்பன் கோவில், ஆண்டு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.சூலூரை அடுத்த காங்கயம்பாளையம் ஐயப்பன் கோவில் பிரசித்தி
பெற்றது. இக்கோவிலில், 38 வது பிரதிஷ்டை தின விழா மற்றும் ராஜகோபுர அபிஷேக விழா பூஜைகள், கடந்த, 5ம் தேதி மாலை துவங்கின. நேற்று முன்தினம் (ஜூன்., 6ல்) கணபதி ஹோமம், சதுசுத்தி, அபிஷேக பூஜைகள் நடந்தன.நேற்று (ஜூன்., 7ல்) காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், நெய் அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.
25 கலசங்கள் வைக்கப்பட்டு, கலச பூஜை நடந்தது. தொடர்ந்து, ஐயப்பன் மற்றும் ராஜகோபுரத் துக்கு கலசாபிஷேகம் நடந்தது. விழாவில், எம்.எல்.ஏ., கந்தசாமி உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.