உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூரில் சேக்கிழார் குரு பூஜை சிவனடியார் வழிபாடு

திருப்பூரில் சேக்கிழார் குரு பூஜை சிவனடியார் வழிபாடு

திருப்பூர்:ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், சேக்கிழார் குரு பூஜை வழிபாடு கோலா கலமாக நடந்தது.திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், அர்த்தஜாம பூஜை
சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், நாயன்மார் குருபூஜை வழிபாடு நடத்தப்படுகிறது.

குலோத்துங்க சோழனின் அரசவையில், தலைமை அமைச்சராக இருந்தவர் சேக்கிழார்.
சமண நூலை படித்த மன்னனையும், மக்களையும், நல்வழிப்படுத்த, 63 நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும், திருத்தொண்டர் புராணத்தை இயற்றினார்.பெரியபுராணத்தை
பாட, சிவபெருமானே, உலகெல்லாம்... என்று அடியெடுத்து கொடுத்தாக புராணங்கள் கூறுகின்றனர். திருப்பூர் விஸ்வேஸ்ரவ சுவாமி கோவிலில் நேற்று (ஜூன்., 7ல்), சேக்கிழார் குரு பூஜை, நடந்தது.

இதையொட்டி, காலை முதல், 63 நாயன்மார்களுக்கு பெரும் திருமஞ்சனம் அபிஷேகம் நடத்தப்பட்டது.தொடர்ந்து, விண்ணப்ப வழிபாடும், திருத்தொண்டர்புராணம், பெரியபுராண பாடல்கள் பாராயணமும் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !