சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்
ADDED :2352 days ago
தேவகோட்டை: தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் ஆனி திருவிழா நேற்று (ஜூலை., 9ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி கோயில் முன் மண்டபத்தில் சொர்ண மூர்த்தீஸ்வரர், பெரிய நாயகி அம்மனுடன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார்.
கோயில் குருக்கள் சந்திரசேகரன் கொடிமரத்திற்கும், சுவாமி அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்தார். நேற்று (ஜூலை 9ல்) மாலை 6:00 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு காப்பு கட்டிய பின் ஆனி திருவிழா தொடங்கியது. இரவு சுவாமி அம்பாள் கேடக வாகனத்தில் வீதி உலா வந்தனர்.
சிவகங்கை தேவஸ்தான அலுவலர்கள், கிராமத்தினர் பங்கேற்றனர். ஜூன் 13 அன்று சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். ஒன்பதாம் நாளான ஜூன் 17 அன்று கண்ட தேவியில் தேரோட்டத்திற்கு பதிலாக சப்பரத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும்.