உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி கணபதி சுவாமிகள் குருபூஜை பக்தர்கள் திரளாக பங்கேற்பு

புதுச்சேரி கணபதி சுவாமிகள் குருபூஜை பக்தர்கள் திரளாக பங்கேற்பு

புதுச்சேரி:தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள கணபதி சுவாமிகள் 18ம் ஆண்டு மகா குருபூஜை விழா நடந்தது.

புதுச்சேரி, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் கணபதி சுவாமிகள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, கணபதி சுவாமிகளின் 18ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடந்தது. அதையொட்டி நேற்று முன்தினம் (ஜூன்., 8ல்) குருதீப ஆராதனையுடன் விழா துவங்கியது.

மாணிக்கவாசகர் சைவநெறி திருக்கூட்டம் சார்பில் கீதா முத்தையன் குழுவினரின் திருவாசக மேடை நிகழ்ச்சி, அச்சுதானந்த சுவாமிகளின் கீர்த்தனைகள் இசை, நாட்டிய பள்ளி மாணவர் களின் நிகழ்ச்சி நடந்தது.நேற்று (ஜூன்., 9ல்) காலை 6:00 மணிக்கு பிரணவ கொடியேற்றத் துடன் குருபூஜை விழா துவங்கியது. தொடர்ந்து, திருப்பள்ளி எழுச்சி, திருப்புகழ் எழுச்சி,
மகா யாகசாலை திருமுறை வேள்வியும், அச்சுதானந்த சுவாமிகளின் கீர்த்தனைகள் நடந்தது. பகல் 12.00 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பகல் 2: 30க்கு ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !