தேவகோட்டை சித்தானூரில் கும்பாபிஷேகம்
ADDED :2340 days ago
தேவகோட்டை:தேவகோட்டை தாலுகா சித்தானூர் கிராமத்தில் உள்ள பொய்சொல்லா மெய்யர் அய்யனார்,வீரமாகாளியம்மன், பெரியகருப்பர் மற்றும் பரிவார தெய்வங்களின் மகா கும்பாபிஷேக விழா வரும் 14ம் தேதி நடக்கிறது.இக்கோயிலில் 12ம்தேதி மாலை 4:30 மணிக்கு
அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மாலை 6:30 யாகசாலை நடக்கிறது.13 ம்தேதி காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 5;30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும்,இரவு 7:00 மணிக்கு பட்டிமன்றமும் நடக்கிறது.14ம்தேதி காலை 8:00 மணிக்கு
கும்பாபிஷேகம் தொடர்ந்து மகா அபிஷேகத்தை தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது.