உடுமலை பாலதண்டாயுதபாணி கோவில் மண்டலாபிஷேகம் நிறைவு
ADDED :2483 days ago
உடுமலை:போடிபட்டி பாலதண்டாயுதபாணி கோவில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. இதையொட்டி, இக்கோவிலில், நேற்று (ஜூன்., 9ல்), மங்கள இசை, விநாயகர் வழிபாடு, கலச ஸ்தாபிதம், வேள்வி வழிபாடு, நிறைவேள்வி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.காலை, 10:00 மணிக்கு, மகாபிஷேகம், கலச அபிஷேகம், அலங்காரமும், காலை, 10:30 மணிக்கு, மகாதீபாராதனை, விபூதி பிரசாதம் வழங்குதல், நடந்தன.