கம்மாபுரம் அடுத்த க.தொழூர் மாரியம்மன் கோவிலில்14ம் தேதி தீமிதி உற்சவம்
ADDED :2325 days ago
கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த க.தொழூர் மாரியம்மன் கோவிலில், வரும் 14ம் தேதி தீமிதி உற்சவம் நடக்கிறது.இதனையொட்டி, கடந்த 5ம் தேதி காப்புகட்டுதல் மற்றும் கொடியேற்றம் நடந்தது.
தினசரி, காலை மாலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், இரவு 7:00 மணியளவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்த அருள்பாலிக்கிறார்.முக்கிய நிகழ்வாக 14ம் தேதி காலை 10:00 மணியளவில் செடல் உற்சவம், மாலை 5:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது. 15ம் தேதி 9:00 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவமும், மாலை 4:00 மணியளவில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது.