உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் கோவில்களில் உண்டியல் திறப்பு

திருப்பூர் கோவில்களில் உண்டியல் திறப்பு

திருப்பூர்:திருப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற விஸ்வேஸ்வரர் மற்றும் வீரராகவப் பெருமாள் கோவில்களில் உள்ள கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் பக்தர்கள் செலுத்திய
காணிக்கைகள் எண்ணும் பணி நடந்தது.இதில், விஸ்வேஸ்வரர் கோவில் உண்டியலில் 7,37,922 ரூபாய்; வீரராகவப் பெருமாள் கோவிலில் 5,09,787 ரூபாயும் பக்தர்கள் செலுத்திய காணிக்கை இருந்தது.

மேலும் இரு கோவில் உண்டியல்களிலும் மொத்தம் 34.4 கிராம் தங்கமும், 115 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. கோவில் ஊழியர்கள், பக்தர்கள் மற்றும் சேவா சங்க மகளிர் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !