உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சத்திரம் குபேரமூர்த்தி கோவிலில் மண்டலாபிஷேக விழா

புதுச்சத்திரம் குபேரமூர்த்தி கோவிலில் மண்டலாபிஷேக விழா

புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை குபேரமூர்த்தி கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது.புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளை குபேரமூர்த்தி கோவிலில், கடந்த ஏப்ரல்
மாதம் 17 ம் தேதி, கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து தினமும் குபேரமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது. மண்டலாபிஷேக நிறைவு விழா நேற்று முன்தினம் (ஜூன்., 9ல்) நடந்தது.

அதனையொட்டி, அன்று இரவு 7.00 மணிக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து இரவு 10.00 மணிக்கு குபேரமூர்த்தி, பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி, மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !