உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை கமல கணபதிக்கு கும்பாபிஷேகம்: சிறப்பு பூஜைகள் துவக்கம்

உடுமலை கமல கணபதிக்கு கும்பாபிஷேகம்: சிறப்பு பூஜைகள் துவக்கம்

உடுமலை:உடுமலை ஜீவா நகர் கமல கணபதி கோவில் கும்பாபிஷேகம் வரும் 13ம் தேதி நடக்கிறது.உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சி, ஜீவா நகரில், கமல கணபதி கோவில், திருப்பணிகள் நிறைவு பெற்று, இன்று (ஜூன்., 11ல்), திருமூர்த்திமலையில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சியுடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது.

நாளை, (12ம் தேதி), காலை, 8:00 மணிக்கு, தீர்த்தங்கள் ஊர்வலம்; காலை, 9:00 மணிக்கு, மங்கள இசை, மகாகணபதி ஹோமம், தன பூஜை உட்பட நிகழ்ச்சிகளும், மாலை, 6:00 மணி முதல், விநாயகர் வழிபாடு, புண்யாகம், வாஸ்துசாந்தி, யாகசாலை பிரவேசம் உட்பட நிகழ்ச்சிகள் நடக்கிறது.இரவு, 9:00 மணிக்கு, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், யந்திர ஸ்தாபனம் நடக்கிறது.வரும் 13ம் தேதி காலை, 6:30 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், புண்யாகவாசனம், சுவாமிக்கு ரக்சாபந்தனம், பூர்ணாகுதி, மகாதீபாரதனையும், காலை, 7:15 கடங்கள் புறப்பாடு, காலை, 7:35 மணிக்கு மேல், 8:25 மணிக்குள், கோபுர விமான கும்பாபி ஷேகம், கமல கணபதி சுவாமிக்கு மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 11:00 மணியில் இருந்து, அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !