உடுமலை ஐயப்பன் கோவிலில் உத்திர நட்சத்திர பூஜை
ADDED :2323 days ago
உடுமலை:மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர், ஜோதி நகர் ஐயப்பன் கோவிலில், உத்திர நட்சத்திர பூஜை இன்று (ஜூன்., 11ல்) நடக்கிறது.
காலை, 9:00 மணிக்கு கணபதி ஹோமம், பகல், 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜை, மதியம், 12:30 சிறப்பு அலங்காரத்துடன் பூஜை நடக்கிறது.
மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து, கோவில் நிர்வாகத்தின் சார்பில், கடந்த கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற கணியூர், காரத்தொழுவு, கடத்தூர், சோழமாதேவி, கண்ணாடிப்புத்தூர், குமரலிங்கம், துங்காவி பகுதிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஜூலை மாதத்தில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.