கிணத்துக்கடவு ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
கிணத்துக்கடவு:நெகமம், ஐயப்பன் கோவிலில், நேற்று (ஜூன்., 10ல்) மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.
நெகமம், அரசுப்பள்ளி அருகே, புதிதாக ஐயப்பன் கோவில் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து, 48 நாள் மண்டல பூஜை நடந்து வந்தது.நேற்று (ஜூன்., 10ல்) மண்டல பூஜை நிறைவு விழாவை ஒட்டி, காலை 7.00 மணிக்கு கணபதி ஹோமம், 10.00 மணிக்கு சங்கு பூஜை, சங்கு, மலர், கனி, நெய், பால், தயிர், இளநீர் போன்றவைகளால்
அபிஷேகம் செய்யப்பட்டது.
பின், ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4.00 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை க்கு பின், 5.00 மணிக்கு புஷ்ப பல்லாக்கில் ஐயப்பன் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது. இரவு ஊஞ்சல் உற்சவத்துடன் மண்டல பூஜை நிறைவடைந்தது.ஏற்பாடுகளை நெகமம் பந்தள சாஸ்தா பூஜா சங்கம் மற்றும் மக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.