மதுரை மீனாட்சி கோயிலில் ஆம்புலன்ஸ் வாகனம்
ADDED :2393 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஜே.கே. பென்னர் இந்தியா லிமிடெட் சார்பில் ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கப்பட்டது.கோயில் கிழக்கு கோபுரம் முன் நடந்த விழாவில் ஆம்புலன்ஸ் சாவியை இணை கமிஷனர் நடராஜனிடம், பென்னர் உதவி பொது மேலாளர் சிவக்குமார் வழங்கினார். கோயில் ஆடி வீதி யானை மகால் பகுதியில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருக்கும். இதில் முதலுதவி, ஆக்ஸிஜன், ஸ்டிரெச்சர், மருத்துவ உபகரணங்கள் உள்ளன.
அவசர தேவைக்கு ஆம்புலன்சை பயன்படுத்தி கொள்ள போலீசார், தீயணைப்பு குழுவினருக்கு கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. தேவை ஏற்படும் போது கோயில் பேட்டரி கார், போலீஸ் மற்றும் தீயணைப்பு டிரைவர்கள் ஆம்புலன்சை இயக்குவர்.