உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நன்றியுடன் வாழ்வோம்!

நன்றியுடன் வாழ்வோம்!

”இறைவா! என்னைச் சொர்க்கத்துக்கு கூட்டிச் செல்லேன்” என்று சொல்வதால் மட்டும் சொர்க்கம் கிடைக்காது. வாழும் காலத்தில் எப்படி இருக்கிறோம் என்பதைப் பொறுத்தே சொர்க்கம் அமையும். நமக்கு எவ்வளவோ நன்மைகள் நடக்கின்றன. மூன்று வேளையும் சாப்பிடுகிறோம். இரவு நிம்மதியாக தூங்குகிறோம். இதற்கெல்லாம் இறை வனுக்கு நன்றியுள்ளவர்களாக  இருக்க வேண்டும். ஆனால் யாருக்கும் நன்றி சொல்லும் எண்ணம் இல்லை.  ”நானே சுயமாகச் சம்பாதித்து வாங்கிய பொருள் இது”  என ஆணவமாகப் பேசுகிறார்கள். நமக்கு உழைக்கும் சக்தியை கொடுத்தது, புத்தி சாலித்தனத்தைக் கொடுத்தது எல்லாம் இறைவனே என்பதை உணர்வதில்லை.  நல்லது நடக்கும் நேரத்தில் இறைவனை நினைக்காதவர்கள், கெட்டது நடந்தால் மட்டும் ” துன்பத்தை ஏன் கொடுத்தாய் இறைவா” எனக் கதறுகிறார்கள். என்ன கேட்க வேண்டும் தெரியுமா?

”இறைவா! நான் செய்த பாவங்களை மன்னித்து விடு; இனி பாவம் செய்ய மாட்டேன்” என வருந்த வேண்டும்.  துன்பத்தையும் இறைவன் கொடுத்த பரிசாக கருத வேண்டும்.
“இறைவனுக்கு நன்றி செலுத்துபவர், அவன் சோதிக்கும் போது பொறுமை காப்பவர்,  பாவ மன்னிப்பைத் தேடுபவர் தாங்கள் விரும்பியபடி சொர்க்கம் நுழைவர்” என்கிறார் நபிகள் நாயகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !