இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சூர்தாஸர் ஜெயந்தி விழா
ADDED :2318 days ago
மதுரை: கிருஷ்ண பக்தர் சூர்தாசரின் ஜெயந்தி விழா மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நடைபெற்றது.
550 ஆண்டுகளுக்கு முன்பு அவதரித்த கிருஷ்ண பக்தர் சூர்தாசரின் ஜெயந்தி விழா மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ஜூன்., 7ல் மாலை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு சஷம் அகில இந்திய தலைவர் மிலின்ட்கஸ்பேகர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட நீதிபதி சத்தியமூர்த்தி கலந்து கொண்டார். இந்த விழாவில் ஜனார்த்தனன், சித்திவிநாயகம், கோயில் ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ்சிவம், சிவகங்கை சமஸ்தான மேலாளர் இளங்கோவன், கண்காணிப்பாளர் பாலசரவணன், ஜலஜா ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சூர்தாசருக்கு இசை அஞ்சலி செலுத்தப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.