ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி கொடியேற்றம்
ADDED :2317 days ago
சோழவந்தான்: சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா நேற்று முன் தினம் இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது.
கொடிமரத்திற்கு பூசாரி சண்முகவேல் தீபாராதனை காட்டினார். அம்மனுக்கு காப்பு காட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து பூக்குழி இறங்கும் மற்றும் அக்னிசட்டி, பால்குடம் எடுக்கும் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர். 17 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் முக்கிய நிகழ்வாக ஜூன் 18 பால்குடம், அக்னிசட்டி, இரவு பூப்பல்லக்கும், 19ல் பக்தர்கள் பூக்குழி இறங்குதலும், 25ல் தேரோட்டமும் நடக்கிறது. விழா காலங்களில் தினமும் இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா எழுந்தருள்வார். ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் சுசிலாராணி மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.