கடலூர் முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
ADDED :2364 days ago
கடலூர்: கடலூர் சுப்புராயலு நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், திருப்பணி மற்றும் மகா கும்பாபிஷேக விழா, நேற்று (ஜூன்., 13ல்) காலை 7:30 மணிக்கு மேல், 8:10 மணிக்குள் நடந்தது.
காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. பூஜைகளை சிவமணி சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் செய்தனர். ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர்கள் முன்னாள் நகர் மன்ற தலைவர் ராஜேந்திரன், ஓட்டல் உரிமையாளர் துரை கோவிந்தராஜன், வழக்கறிஞர் சுந்தர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். விழாவில், மூத்த வழக்கறிஞர் சிவமணி, எஸ்.எஸ்.விலாஸ் பாத்திரக்கடை உரிமையாளர் மாரியப்பன், வைகை தேவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.