உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமங்கலத்தில் அங்காள ஈஸ்வரி கோயில், கும்பாபிஷேகம்

திருமங்கலத்தில் அங்காள ஈஸ்வரி கோயில், கும்பாபிஷேகம்

திருமங்கலம்:- திருமங்கலம் அங்காள ஈஸ்வரி, வாலகுருநாதன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மீனாட்சி சொக்கநாதர் கோயில் பட்டர் சங்கரநாராயணன் நடத்தி வைத்தார்.

ஏற்பாடுகளை நிர்வாகிகள் அனிதா பால்ராஜ், ராமமூர்த்தி, மகாலிங்கம், குருநாதன் செய்தி ருந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. உசிலம்பட்டிஉசிலம்பட்டி காவலர் குடியிருப்பில் உள்ள சந்தனமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. டி.எஸ்.பி., ராஜா, இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் பங்கேற்றனர். அலங்காநல்லூர் குலமங்கலம் அருகே வடுக பட்டியில் பழமையான காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. எம்.எல்.ஏ., மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !