உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பி.என்.புதூரில் காமாட்சி அம்மனுக்கு கும்பாபிஷேகம்

பி.என்.புதூரில் காமாட்சி அம்மனுக்கு கும்பாபிஷேகம்

காமாட்சி அம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மன் அருள்பெற்றனர்.பி.என்.புதூரில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழா நேற்று (ஜூன்., 14ல்) கோலாகலமாக நடந்தது.

விநாயகர் பூஜையை தொடர்ந்து காலை, 7:00 மணிக்கு காமாட்சி அம்மன், விநாயகர், முருகன், சிவன் ஆகிய தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் இடம்பெற்றது.தொடர்ந்து, அபிஷேக அலங்கார பூஜையுடன், தீபாராதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள் அம்மன் அருள்பெற்றனர். நிர்வாகிகள் தலைமையில் நடந்த விழாவின் இறுதியில், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (ஜூன்., 14ல்) முதல், 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !