பஞ்சலிங்கம் சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு
ADDED :2342 days ago
உடுமலை:உடுமலை, திருமூர்த்திமலை பஞ்சலிங்க சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது.உடுமலையில் பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்றுமுன்தினம் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. மேலும், பஞ்சலிங்க சுவாமிகளுக்கு, பால், தயிர், பன்னீர், உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிேஷகத்துடன் சிறப்பு அலங்காரம் நடந்தது.விடுமுறை நாட்கள் என்பதால், பஞ்சலிங்க சுவாமிகள் தரிசனத்துக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடத்துார் அர்ச்சுனேஸ்வரர் கோவில், கொழுமம் காசிவிஸ்வநாதர் கோவில், உடுமலை, தில்லை நகர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில்களிலும், பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.