உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயருக்கு கும்பாபிஷேக திருவிழா

பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயருக்கு கும்பாபிஷேக திருவிழா

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - புதுச்சேரி வழியில்   அமைந்துள்ள பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயிலில்  23.6.19 அன்று காலை 9 மணிக்கு மேல் 10. 30 மணிக்குள் அஷ்டபந்தன, ஸ்வர்ண பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் இன்று 17.6.19 காலை 9 மணிக்கு மகா கணபதி  ஹோமத்துடன் ஆரம்பிக்கப்படுகிறது.

நிகழ்ச்சி நிரல்: இன்று மாலை 5 மணி- பகவத் ப்ரார்த்தனை,  ஆலய நிர்வாகிகள் மஹா சங்கல்பம், மிருத்ஸங்க்ரஹணம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி.

18.6.19 - செவ்வாய் காலை 8.30 மணி - மஹா சுதர்சன  ஹோமம், லக்ஷ்மிந்ருஸிம்மர் ஹோமம், தன்வந்திரி ஹோமம்,  அஷ்டலட்சுமிஹோமம், உற்சவர் சக்கரத் தாழ்வார் திருமஞ்சனம், தீபாராதனை, மாலை 5.00 மணி - அஜஸ்ர தீப பூஜை, கன்யா பூஜை, சுவாசினி பூஜை, தம்பதி பூஜைகள்.

19.6.19 - புதன்காலை 9 மணி - ஆச்சார்யர்கள் அழைப்பு, பகவத் பிரார்த்தனை, அகல்மஷ ஹோமம், பூத சுத்தி, தீர்த்த சங்க்ரஹணம், கும்ப பூஜை, வேத    ப்ரபந்த பாராயண தொடக்கம். மாலை 5 மணி - புண்யாஹம், அக்னி மதனம் (அரசமரத்திலிருந்து அக்னி கடைந்து எடுத்தல்) அக்னி ப்ரணயணம், கலா கர்ஷணம்,  யாகசாலா ப்ரவேசம்,ரக்ஷாபந்தனம், ஸர்வதேவதார்ச்சனம், ஹௌத்ர ப்ரசம்சனம். இரவு 9 மணி -பூர்ணாஹூதி - சாற்றுமுறை- காலம்

20.6.19 - வியாழன்  காலை 6 மணி - சுப்ரபாதம், விஸ்வரூபம், 7 மணி - திருப்பாவை திருப்பள்ளி எழுச்சி, சேவா காலம், 8 மணி -  புண்யாஹம், காலசந்தி பூஜை அநுமார் சன்னதியிலிருந்து ரிக்விக் பூத சுத்தி  ஆலய வலமாக யாகசாலா பிரவேசம்.  9 மணி -மஹா சாந்தி ஹோமம், அனைத்து குண்டங்களிலும் பிரதான ஹோமங்கள்,  11 மணி - பூர்ணாஹூதி -சாற்றுமுறை- காலம் 2.

மாலை 5 மணி - அநுமார் சன்னதியிலிருந்து ஆச்சார்யர்கள் அனுஷ்டானம்,  ஆலய வலமாக யாகசாலா பிரவேசம்,  6.00 மணி - மஹா சாந்தி ஹோமம், அனைத்து குண்டங்களிலும் பிரதானஹோமங்கள், உற்சவர் சயனாதி வாசம். இரவு 9 மணி - பூர்ணாஹூதி - சாற்றுமுறை - காலம் 3.

21.6.19 -வெள்ளி காலை 6.00 மணி - சுப்ரபாதம், விஸ்வரூபம். 7மணி - திருப்பாவை திருப்பள்ளி எழுச்சி, சேவா காலம். 8 மணி - புண்யாஹம், காலசந்தி பூஜை, அநுமார் சன்னதியிலிருந்து ரித்விக் பூத சுத்தி  ஆலய வலமாக யாகசாலா பிரவேசம். 9 மணி -மஹா சாந்தி ஹோமம், அனைத்து குண்டங்களிலும் பிரதான ஹோமங்கள். 10.30 மணி - உற்சவர் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீநிவாஸ திருமஞ்சனம். 11 மணி - பூர்ணாஹூதி - சாற்றுமுறை - காலம் 4.

மாலை 5 மணி விமானங்கள் இராஜ கோபுரம் கண் திறப்பு, கோ பூஜை அநுமார் சன்னதியிலிருந்து ஆச்சார்யர்கள் அனுஷ்டானம்,  ஆலய  வலமாக யாகசாலா பிரவேசம். 6மணி மஹா சாந்தி ஹோமம், அனைத்து குண்டங்களிலும் பிரதான ஹோமங்கள், சயனாதி வாசம் இரவு 9 மணி - பூர்ணாஹூதி - சாற்றுமுறை -காலம் 5.
22.6.19 - சனி காலை 6 மணி - சுப்ரபாதம், விஸ்வரூபம், 7 மணி - திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி சேவா காலம், 8 மணி - அநுமார் சன்னதியிலிருந்து ரித்விக் பூத சுத்தி,  ஆலய வலமாக யாகசாலா பிரவேசம், 9 மணி -மஹா சாந்தி ஹோமம், அனைத்து குண்டங்களிலும் பிரதான ஹோமங்கள், 10.30 மணி - மஹா சாந்தி, பூர்ணாஹூதி, மஹா சாந்தி கட திருமஞ்சனம், ரக்ஷாபந்தனம். 11 மணி - பூர்ணாஹூதி - சாற்றுமுறை - காலம் 6.

மாலை 5 மணி - அநுமார் சன்னதியிலிருந்து ஆச்சார்யர்கள் அனுஷ்டானம்,  ஆலய வலமாக யாகசாலா பிரவேசம்.  6 மணி - சயனாதி வாசம், பிரதான ஹோமங்கள். இரவு 9 மணி - பூர்ணாஹூதி விசோத்தாரா ஹோமம் - சாற்றுமுறை காலம் 7.

23.6.19 ஞாயிறு காலை காலை 5 மணி - சுப்ரபாதம், விஸ்வரூபம், 6 மணி - திருப்பாவை, திருப்பள்ளி, எழுச்சி சேவா காலம். 7 மணி - புண்யாஹம், கால சந்தி பூஜை. 8 மணி - மஹா பூர்ணாஹூதி, பஞ்சாக்னி, ஸமாரோபணம்- காலம் 8.காலை 9 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, 10 மணிக்கு ராஜகோபுரம், அனைத்து விமானங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம். காலை 10.15 மணிக்கு மூலவர்கள் மஹா சம்ப்ரோக்ஷணம்,  மஹா தீபாராதனை,வேத விண்ணப்பம், சாற்றுமுறை. ஆழ்வார் ஆச்சார்யர்கள் மரியாதை, தீர்த்த கோஷ்டி, மாலை 3 மணி- ஆலய நிர்வாகிகள் மரியாதை, மாலை 6 மணி- ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ஸ்ரீநிவாஸ திருக்கல்யாண மஹோத்ஸவம். இந்த மகா கும்பாபிஷேகத்திற்கு பின் 24.6.19 முதல் 11.8.19 வரை48 நாட்கள் நடைபெற உள்ள மண்டலாபிஷேகத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பக்தர்கள் கோயில் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு எண்: 0413-2671 232, 2678 823, 94425 02446, 94898 50506 இந்த புண்ணிய ஸ்தலத்தில் இன்னும் 6 நாட்களில் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !