காரைக்குடி ராதா கல்யாண மஹேத்ஸவம்
ADDED :2339 days ago
காரைக்குடி: காரைக்குடி செக்காலை சங்கர மடத்தில் பத்தாம் ஆண்டு ராதா கல்யாண மஹோத்ஸவ பூஜை நேற்று (ஜூன்., 16ல்) நடந்தது. காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான் உடையாளூர் கல்யாணராம பாகவதர் நிகழ்ச்சியை நடத்தினார். நேற்று முன்தினம் (ஜூன்., 15ல்) காலை அஷ்டபதி மற்றும் இரவு திவ்யநாம பஜனை நடந்தது. நேற்று (ஜூன்., 16ல்) காலை 7:30 மணிக்கு உஞ்சவ்ருத்தி பஜனை, பகல் 12:00 மணிக்கு ராதா கல்யாண மஹோத்ஸ பூஜை நடந்தது. அதை தொடர்ந்து ஆஞ்சநேயர் உத்ஸவம் மற்றும் பிரசாத விநியோகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.