திருக்கோவிலூர் ஞானானந்தா நிகேதனில் அன்னதான நிகழ்ச்சி
ADDED :2387 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஞானானந்த நிகேதனில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஞானானந்த சத்சங்க மண்டபத்தில், அன்னதான நிகழ்ச்சி நடந்தது.அறங்காவல் குழுத் தலைவர் நித்யானந்த கிரி சுவாமிகள் துவக்கி வைத்தார். சுவாமி பிரபவானந்த சரஸ்வதி அன்னதானம் வழங்கினார். பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். சுவாமி அம்ருதேஸ்வரானந்தா, விஜயலட்சுமி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் கோபாலகிருஷ்ணன், சந்திரசேகர் உட்பட
பலர் பங்கேற்றனர்.