உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் ராம்பாக்கம் கோவிலில் கருட சேவை உற்சவம்

விழுப்புரம் ராம்பாக்கம் கோவிலில் கருட சேவை உற்சவம்

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த ராம்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், நம்மாழ் வார் பிறந்த தினத்தையொட்டி கருட சேவை உற்சவம் நடந்தது.இதனையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், கருட சேவையில், பெரு மாளை எழுத்தருளச் செய்து, முக்கிய வீதிகளின் வழியாக வீதியுலா நடந்தது. நிகழ்ச்சியில் கிராம பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கிராம பொதுமக்கள்
செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !