வாலாஜாபேட்டை சொர்ண சனீஸ்வரர் கும்பாபிஷேகம்
ADDED :2387 days ago
வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், புதியதாக தங்கத்திலான சனீஸ்வர பகவான் மற்றும் லட்சுமி வராஹர் மூர்த்தி, மங்கள சனீஸ்வரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இதற்கான மஹா கும்பாபிஷேகம் நடந்தது. முரளிதர சுவாமிகள் தலைமையில், 12 சிவாச் சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து கணபதி பூஜை, சனீஸ்வர பூஜை நடந்தது.
விழாவில், சக்தி அம்மா, ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், மகானந்த சுவாமிகள், கலெக்டர் ராமன் உள்பட பலர் பங்கேற்றனர். இங்கு ஏழரை, அஷ்டம, அர்தாஷ்டம சனி போன்றவற்றால் வரும் தோஷங்கள் விலக சிறப்பு பூஜைகள் செய்யப்படும் என, முரளிதர சுவாமிகள் கூறினார்.