செல்லியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் விழா
ADDED :2385 days ago
சிறுபாக்கம்: சிறுபாக்கம் செல்லியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் விழா நடந்தது. சிறுபாக்கத்தில் செல்லியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கடந்த 14ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பருவமழை பெய்யவும், பசுமை புரட்சி ஏற்படவும், 30 ஆண்டுகளுக்கு பின் செல்லியம்மன், ஆண்டவர், மாரியம்மன், மருதையான், கருப்பையா, அய்யனார் சுவாமிகளுக்கு பால், பன்னீர், தேன், சந்தனம் திரவியங்களில் அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது. இரவில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சுவாமிகள் வீதியுலா வந்தது. நேற்று முன்தினம் மாலை, செல்லியம்மன் கோவில் வளாகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து பூஜை செய்தனர். சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.