மூன்று வகை தீர்த்தம்
ADDED :2339 days ago
கோயில்களில் புனிதமான குளங்களை ’தீர்த்தம்’ என்கிறோம். இவற்றை பிரம்ம, சூரிய, மானுட தீர்த்தங்கள் என பிரிப்பர். கடவுளரால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் ’பிரம்ம தீர்த்தம்’. காளஹஸ்தி, காஞ்சிபுரம், ராமேஸ்வரம், சீர்காழி, சிதம்பரம் கோயில்களில் உள்ளன. சூரியனுக்கு பிடித்தமானது சூரிய தீர்த்தம், சிவத்தலங்களான சிதம்பரம், காஞ்சிபுரம், திருவையாறு, திருவெண்காட்டில் உள்ளன. அரசர்கள், சிவபக்தர்களால் உருவாக்கப்பட்டது மானுட தீர்த்தம். இதில் திருவாரூர் தியாகராஜர் கோயில் முன்புள்ள கமலாலயம் குளம் சிறப்புமிக்கது.