உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல்லில், மழை பெய்ய வேண்டி வருண ஜபம்

நாமக்கல்லில், மழை பெய்ய வேண்டி வருண ஜபம்

நாமக்கல்: நாமக்கல்லில், உலக நன்மை வேண்டி, கோ -பூஜையும், யாக வேள்வியும் நடந்தது. தமிழகம் மற்றும் கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து மேட்டூர் அணை நிரம்பி இருக்கவும், அனைத்து நீர் நிலைகள் நிரம்பவும், விவசாயம் செழிக்கவும், நாட்டு மக்கள் நலன் பெற வேண்டியும், பாரதிய கிசான் சங்கம், அனைத்து ஆன்மிக அமைப்புகள் சார்பில், நாமக்கல் அடுத்த வள்ளிபுரம் தான்தோன்றீஸ்வரர் கோவிலில், கோ- பூஜை மற்றும் சிறப்பு யாகம் நேற்று (ஜூன்., 18ல்) நடந்தது.

பாரதிய கிசான் சங்க தென் பாரத அமைப்பு செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். காலை, 6:00 மணிக்கு கோ - பூஜை, 7:00 மணிக்கு சங்கல்பம், கணபதி ஹோமம், வருண ஜபம், பர்ஜன்ய சாந்தி வேள்வி, பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடந்தது. சிவாச்சாரியார்கள் தண்ணீர் நிரப்பப்பட்ட பெரிய பாத்திரத்தில் அமர்ந்து வருண ஜபத்தில் ஈடுபட்டனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !