லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்
ADDED :2334 days ago
புதுச்சேரி: மடுகரை குரு நகர் பகுதியில் அமைந்துள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், நம்மாழ்வார் திருநட்சத்திர வைபவம் நடந்தது.இதையொட்டி, உற்சவ மூர்திகளுக்கு பால், தயிர், அபி ஷேகப்பொடி, மஞ்சள், சந்தனம், பன்னீர், எலுமிச்சை மற்றும் பஞ்சாமிர்தம் கொண்டு அபி ஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கடலுார் பஜனை கோஷ்டியினரின் பஜனை நடந்தது. பின் திருவாச்சியார், திருவாய்மொழி, திருப்பல்லாண்டு, திருப்பாவை சேவை நடந்தது.