அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா
ADDED :2318 days ago
திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே செண்பகம்பேட்டையில் பனிச்சாருடைய அய்யனார், செவிட்டு அய்யனார் கோயில் 33 வது புரவி எடுப்பு விழா நடந்தது.
இங்கு 3 ஆண்டிற்கு ஒரு முறை புரவி எடுப்பு விழா நடக்கும். கிராம மக்கள் பொட்டுவிடுதல் எனும் உத்தரவு பெற்று, விரதமிருந்தனர். புரவிகள் தயார் செய்யப்பட்டு பொட்டலுக்கு எடுத்து வந்தனர், அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஓலை பெட்டிகளில் கொண்டு வந்த நெல்லை மண்குதிரைகளின் காலில் கொட்டி வழிபட்டனர். செண்பகம் பேட்டை, இரணியூர், அயனிப்பட்டி கிராமத்தினர் யானை, குதிரை, காளை சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்றனர். புரவிகள் ஊர்வலமாக எடுத்து சென்று செவிட்டு அய்யனார், பனிச்சாருடைய அய்யனார் கோயிலில் 300க்கும் மேற்பட்ட சிலைகளை வைத்தனர்.