கள்ளக்குறிச்சியில் மழை வேண்டி சிறப்பு தொழுகை
ADDED :2469 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மழை வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.கள்ளக்குறிச்சி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையை போக்கி குடிமக்கள் நலமுடன் வாழ்ந்திட வேண்டி கள்ளக்குறிச்சி க.மாமனந்தல் சாலை மர்கஸ் சலாமுன்னாஸ் தர்காவில் நேற்று (ஜூன்., 23ல்)காலை 6:40 மணி அளவில் சிறப்பு தொழுகை நடத்தினர்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கள்ளக்குறிச்சி தலைவர் சாதிக் பாஷா, செயலர் அய்யூப் கான், பொருளாளர் சம்சுதீன், துணைத் தலைவர் ஆலம், துணைச் செயலர் ரபீக், தொண்டரணி சல்மான், மருதுவரணி இதயத்துல்லா, மாணவரணி ஆஷிக் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.போதிய அளவு மழை பெய்து நாட்டில் நிலவும் தண்ணீர் பஞ்சம் தீரவேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.