சாத்தூரில் ஆலயத்திருவிழா
ADDED :2367 days ago
சாத்தூர்: சாத்தூர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள 115 வருட பழமையான இயேசுவின் திரு இருதய ஆலயத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதன் பின்னர் இரவு 10:00 மணியளவில் நற்கருணை பேரணி நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் இயசுவின் திரு இருதய சொரூபம் அலங்கரித்து சாத்தூரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஆலயத்தை அடைந்தது. திருவிழா பேரணியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.