உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், கொடியேற்றம்

நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், கொடியேற்றம்

நரசிங்கபுரம்: நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், நாளை (ஜூன்., 25ல்), ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றம் நடைபெற உள்ளது.

பேரம்பாக்கம் அடுத்துள்ள நரசிங்கபுரத்தில் உள்ளது, மரகதவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில்.இந்த கோவிலில், இந்த ஆண்டு ஆனி பிரம்மோற்சவம், இன்று (ஜூன்., 24ல்), காலை, 5:00 மணிக்கு அங்குரார்பணத்துடன் துவங்குகிறது.

அதன் பின், நாளை (ஜூன்., 25ல்), காலை, 6:00 மணிக்கு மேல், 7:30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும்.அதன்பின், காலை, 8:00 மணிக்கு, உற்சவர் சப்பரத்திலும், இரவு, 7:00 மணிக்கு சிம்ம வாகனத்திலும், வீதியுலா நடைபெறும்.

அதை தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், தினமும், காலை, 10:00 மணிக்கு உற்சவர் திருமஞ்சனமும், மாலை, 6:00 மணிக்கு, பத்தி உலாத்தலும், ஆண்டாள் சன்னதி மண்டபத்தில் ஊஞ்சல் சேவையும் நடைபெறும்.

நாள்                  நேரம்                                      உற்சவம்

ஜூன்   26 - காலை 7:00 மணி -     அம்ச வாகனம்
                    -  இரவு 7:00 மணி   -      சூர்ய பிரபை

ஜூன்   27 - காலை 6:00 மணி -      கருடசேவை
                    - இரவு 7:00 மணி     -     அனுமந்த வாகனம்

ஜூன்   28 - காலை 7:00 மணி -     சேஷ வாகனம்
                    - இரவு 7:00 மணி     -    சந்திர பிரபை

ஜூன்   29 - காலை 6:00 மணி  -   பல்லக்கு
                    - இரவு 7:00 மணி     -   யாளி வாகனம்

ஜூன்   30 - காலை 7:00 மணி -     சூர்ணாபிஷேகம்
                    - இரவு 7:00 மணி     -     யானை வாகனம்

ஜூலை 01 - காலை 6:00 மணி -    திருத்தேர்
                      - இரவு 7:00 மணி     -   புஷ்ப பல்லக்கு

ஜூலை 02 - காலை 9:00 மணி -    தொட்டி திருமஞ்சனம்
                      - இரவு 7:00 மணி     -    குதிரை வாகனம்

ஜூலை 03 - காலை 6:00 மணி -    பல்லக்கு
                      - காலை 10:00 மணி -  தீர்த்தவாரி
                      - இரவு 7:00 மணி       - காருட வாகனம்

ஜூலை 04 - காலை 10:00 மணி - த்வாதசாராதனம்
                      - இரவு 7:00 மணி       - கொடியிறக்கம்

ஜூலை 05 - காலை 9:00 மணி -  விடையாற்றி திருமஞ்சனம்
                      - இரவு 7:00 மணி     -  விடையாற்றி உற்சவம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !