வீரட்டானேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி யாகம்
ADDED :2311 days ago
பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், மழை வேண்டி சிறப்பு யாகம், எம்.எல்.ஏ., சத்யாபன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது.
யாகத்தை எம்.எல்.ஏ., சத்யாபன்னீர்செல்வம் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு சிறப்பு வேள்வி, கோவில் திருக்குளத்தில் தண்ணீரில் நின்று ஜப வேள்வியில் சிவாச்சாரியார்கள் ஈடுபட்டனர். பின் சுந்தரர் அருளிய மழை வேண்டும் பதிகம் பாடப்பட்டது. நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், வீணை கலைஞர்கள் அமிர்தவர்ஷினி, கவர்ஷினி,கேதாரி, ஆனந்தபைரவி, ரூபகல்யாணி ராகங்களை இசைத்தனர். சிவபெருமானுக்கு சீதள கும்பம் எனப்படும் தாராபாத்திர நீர் விழா, ருத்ராபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.