உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி பகவதி அம்மன் கோவிலில் 1,008 கலசாபிஷேகம்

மழை வேண்டி பகவதி அம்மன் கோவிலில் 1,008 கலசாபிஷேகம்

நாகர்கோவில்: மழை பெய்ய வேண்டி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில், 1,008 கலசாபிஷேகம் நடந்தது. தமிழகத்தில் பருவ மழை சரியாக பெய்யாததால், நீர்ஆதாரங்கள் வறண்டன.


சென்னை உட்பட மாநிலத்தின் பல இடங்களில் கடும் குடிநீர் தட்டு ஏற்பட்டது. இதை தொ டர்ந்து, பொது மக்களுக்கு தேவையான தண்ணீர் கொண்டு வர, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மழை பெய்ய வேண்டி, தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோவில்களில் சிறப்பு யாகம் மற்றும் வழிபாடுகள் நடந்து வருகின்றன. இந்த வரிசையில், குமரி பகவதி அம்மன் கோவிலில் நேற்று காலை யில் 1,008 கலசாபிஷேகம் நடந்தது. நல்லெண்ணெய், தயிர், தேன் உள்ளிட்டவைகளால் சிறப்பு பூஜை செ ய்யப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !