உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி வின்ச்சில் பெங்களூரு பொறியாளர்கள் ஆய்வு

பழநி வின்ச்சில் பெங்களூரு பொறியாளர்கள் ஆய்வு

பழநி: பழநி முருகன்கோயில் மூன்று வின்ச்சுகளில் இயந்திரங்கள், கம்பி வடத்தின் உறுதித் தன்மையை பெங்களூருவைச் சேர்ந்த தேசிய இயந்திரவியல் ஆய்வக குழுவினர் ஆய்வு செய்தனர்.

பழநி மலைக்கோயிலுக்கு 8 நிமிடங்களில் எளிதாக செல்லும் வகையில் மூன்று வின்ச்கள் இயங்குகின்றன. முதலாம் எண் வின்ச்சில் தற்போது பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதையொட்டி நேற்று (ஜூன்., 28ல்) பெங்களூருவைச் சேர்ந்த நேஷனல் ராக் மெக்கானிசம் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ராஜன் பாபு தலைமையில் 6 பேர் மூன்று வின்ச் களிலும் இன்ஜின், மோட்டார், சாப்ட், உருளைகள், சக்கரங்கள் மற்றும் கம்பிவடம் போன்றவற்றை நவீன கருவிகள் மூலம் அளவீடு செய்து உறுதிதன்மையை ஆய்வுசெய்தனர்.

இன்ஜின், இயந்திரங்கள் பழுது, தேய்மானம் கண்டறியப்பட்டால் அதனை குழுவினர் ஆய்வறிக்கையாக சமர்பிக்க உள்ளனர். அதனடிப்படையில் பராமரிப்பு பணிகள்
மேற்கொள்ளப்படும் என கோயில் அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !