திருப்பரங்குன்றம் காளியம்மன் கோயில் திருவிழா நடத்த முடிவு
ADDED :2375 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடி அம்பேத்கார்நகர் பத்ர காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதிதாக வைக்கப்பட்ட கல்வெட்டிற்கு அப்பகுதியை சேர்ந்த மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அங்கு மோதல் ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதுகுறித்து தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் நாகராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபவி தலைமையில் இரு தரப்பினர் பங்கேற்ற சமாதானக் கூட்டம் நடந்தது. இதில் ஜூலை 16,17,18 தேதிகளில் இருதரப்பினரும் இணைந்து ஒற்றுமையாக திருவிழா நடத்த முடிவானது.