உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் மலைக்கோவிலின் தலைமுடி ஏலம் ஒத்திவைப்பு

திருத்தணி முருகன் மலைக்கோவிலின் தலைமுடி ஏலம் ஒத்திவைப்பு

திருத்தணி : திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தினமும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள், நேர்த்திக் கடனைச் செலுத்த, தங்களது தலை முடியை காணிக்கையாக வழங்குகின்றனர்.இந்த தலைமுடி, கோவில் நிர்வாகத்தால் ஆண்டுக்கு ஒரு முறை ஏலம் விடப்படுகிறது.

அந்த வகையில், நேற்று (ஜூன்., 28ல்), முருகன் கோவில் தலைமை அலுவலகத்தில், கோவில் தக்கார், ஜெய்சங்கர், இணை ஆணையர் பொறுப்பு, ஞானசேகரன், வேலூர் உதவி ஆணையர், ஜான்சிரானி, திருத்தணி கோவில் உதவி ஆணையர், ரமணி ஆகியோர் முன்னிலையில், தலைமுடிக்கான ஏலம் விடப்பட்டது.ஆரம்ப ஏலத் தொகையாக, 1 கோடியே, 73 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால், ஏலம் எடுப்பதற்கு யாரும் முன்வராததால், தலைமுடி ஏலம் மட்டும் மறுதேதி அறிவிப்பு இல்லாமல் ஒத்திவைக்கப்பட்டது. மலைக்கோவிலில் மீதமுள்ள கடைகள், உப்பு, மிளகு, அர்ச்சனை தேங்காய், பூ, வில்வம் போன்றவை மட்டும், நேற்று (ஜூன்., 28ல்), ஏலம் விடப்பட்டு, ஏலம் எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !