உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அத்தி வரதர் வைபவத்தை முன்னிட்டு, ஜூலை 1ல் காஞ்சியில் உள்ளூர் விடுமுறை

அத்தி வரதர் வைபவத்தை முன்னிட்டு, ஜூலை 1ல் காஞ்சியில் உள்ளூர் விடுமுறை

காஞ்சிபுரம் : காஞ்சி அத்தி வரதர் வைபவத்தை முன்னிட்டு, ஜூலை 1ம் தேதி, காஞ்சிபுரம் தாலுகாவிற்கு, உள்ளூர் விடுமுறையாக அறிவித்து, கலெக்டர் பொன்னையா உத்தர விட்டுள்ளார்.

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும், அத்தி வரதர் வைபவம், வரும் திங்கட்கிழமையன்று துவங்க உள்ளது. லட்சக்ணக்கான பக்தர்கள் வெளியூரிலிருந்து வந்து, தரிசனம் செய்வார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றவாறு, பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் தாலு காவைச் சேர்ந்த பக்தர்கள், மாலை, 5:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை தரிசிக்கலாம் என, சிறப்பு அனுமதி, மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, காஞ்சிபுரம் தாலுகாவிற்கு மட்டும், வரும் ஜூலை 1ல், உள்ளூர் விடுமுறை யாக அறிவித்து, கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படும் என, தெரிவிக்கப் பட்டுள்ளது.உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்ய, அத்தி வரதர் வைபவம் முடிவதற்குள் அல்லது அதற்கு அடுத்த ஒரு சனிக்கிழமை, பணி நாளாக அறிவிக்கப்படும் என, தெரிவிக்கப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !