உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் அருகே மோசூரம்மன் கோவில் தேரோட்டம் விமரிசை

காஞ்சிபுரம் அருகே மோசூரம்மன் கோவில் தேரோட்டம் விமரிசை

காஞ்சிபுரம் : மதுராந்தகம், மோச்சேரியில் உள்ள மோசூரம்மன் கோவிலில், தேரோட்டம் விமரிசையாக நடந்தது.மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட மோச்சேரியில், மோசூரம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், ஆனி மாதம், தேரோட்டம் விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்தாண்டு தேரோட்டம் நேற்று (ஜூன்., 28ல்) நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், மோசூரம்மன், மதியம், 2:00 மணிக்கு தேரில் எழுந்தருளினார்.முக்கிய வீதிகள் வழியாக உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிநெடுகிலும், பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து, பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டனர். மாலை, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !